லஞ்சம்: கிராம நிர்வாக அலுவலர் கைது

தஞ்சாவூர் மாவட்டம்,  பட்டுக்கோட்டையில் திங்கள்கிழமை விவசாயியிடம் ரூ. 2,000 லஞ்சம் வாங்கியதாக

தஞ்சாவூர் மாவட்டம்,  பட்டுக்கோட்டையில் திங்கள்கிழமை விவசாயியிடம் ரூ. 2,000 லஞ்சம் வாங்கியதாக கிராம நிர்வாக அலுவலரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
பட்டுக்கோட்டை அருகேயுள்ள இடையாத்தி வடக்குக் கிராமத்தைச் சேர்ந்தவர் கோ. நடராஜன் (52). இவர் பட்டா மாற்றம் செய்வதற்காக ஜூன் 21ஆம் தேதி இ - சேவை மையம் மூலம் விண்ணப்பித்தார். இதையடுத்து, இடையாத்தி தெற்குக் கிராம நிர்வாக அலுவலர் எஸ். பாஸ்கரை (37) சந்தித்தார். பட்டா மாற்றம் செய்வதற்கு ரூ. 2,000 லஞ்சமாகக் கொடுக்க வேண்டும் என நடராஜனிடம் பாஸ்கர் கேட்டாராம்.
இதுகுறித்து தஞ்சாவூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் நடராஜன் புகார் செய்தார். இதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதனிடையே, பட்டுக்கோட்டையில் நீதிமன்றம் எதிரே உள்ள கடைவாசலுக்கு வருமாறு நடராஜனிடம் பாஸ்கர் கூறினாராம். இதன்படி, திங்கள்கிழமை நிகழ்விடத்துக்குச் சென்ற நடராஜனிடம் பாஸ்கர் ரூ. 2,000 வாங்கினாராம். அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் பாஸ்கரை பிடித்து கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com