உலக மக்கள் தொகை தினம்: பெண்கள் கல்லூரியில்விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, ஒரத்தநாடு அரசு பெண்கள் கலை கல்லூரியில் புதன்கிழமை சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, ஒரத்தநாடு அரசு பெண்கள் கலை கல்லூரியில் புதன்கிழமை சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 
மத்திய அரசின் மக்கள் தொடர்பு கள அலுவலகம்,  தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், தஞ்சாவூர் மற்றும் ஒரத்தநாடு அரசு கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியன இணைந்து நடத்திய ஆயுஷ்மான் பாரத் மற்றும் உலக மக்கள் தொகை தினம், தேசிய சுகாதார பாதுகாப்பு சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை ஒரத்தநாடு அரசு கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது. 
ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் பா.சிந்தியாசெல்வி,  நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர்கள் மா. பிரேமாவதி மற்றும் ரோஜா செய்திருந்தனர். 
மக்கள் தொடர்பு கள அலுவலக விளம்பர உதவி அலுவலர் சு. அருண்குமார் நிகழ்ச்சிக்கான நோக்கயுரையாற்றினார்.  தொண்டராமபட்டு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். சு. இந்திரா, ஒரத்தநாடு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் வே. வெற்றிவேந்தன் கருத்துரையாற்றினார்.  தொண்டராம்பட்டு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ர. சுரேஷ்குமார் வாண்டையார் ஆகியோர் வாழ்த்தி பேசினார்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com