தஞ்சை மீனாட்சி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு சிறப்பு தரச்சான்று

தென் தமிழகத்திலேயே முதல் முறையாக தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு சிறப்பு தரச்சான்றை பெற்றுள்ளது.

தென் தமிழகத்திலேயே முதல் முறையாக தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு சிறப்பு தரச்சான்றை பெற்றுள்ளது.
சஅஆஏ என்ற அமைப்பானது, தேசிய அளவில் மருத்துவமனைகளுக்கான தர நிலை கட்டமைப்பை ஏற்படுத்தி, அதை முறையாக பின்பற்றும் மருத்துவமனைகளுக்கு அங்கீகார சான்றிதழை வழங்கி வருகிறது. 
மீனாட்சி மருத்துவமனையானது ஏற்கெனவே சஅஆஏ அமைப்பின் முழு தரச்சான்று பெற்றுள்ளது. 
இந்நிலையில், தற்போது தென்தமிழகத்திலேயே முதல்முறையாக தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையின்அவசர சிகிச்சைப் பிரிவும் சிறப்பு தரச்சான்று பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  
மருத்துவமனையின் தலைமை நிர்வாகி மருத்துவர் ரமேஷ்பாபு மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் ரவிச்சந்திரன் ஆகியோரின் சீரிய வழிகாட்டுதலின்பேரில் இந்த தரச்சான்று பெறப்பட்டுள்ளது. மீனாட்சி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவானது மாதந்தோறும் சுமார் 1200 நோயாளிகளுக்கு மருத்துவ சேவை அளித்து வருகிறது. 25 மருத்துவர்கள் 60 மருத்துவப் பணியாளர்கள் உதவியுடன் தலைமை மருத்துவர் சரவணவேல் மற்றும் தீபக்நாராயணன் ஆகியோரின் ஒத்துழைப்புடன் இப்பிரிவு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 
இங்கு 12 படுக்கை வசதியுடன் உலகத் தரத்திற்கு இணையான உள்கட்டமைப்பு மற்றும் நவீன கருவிகள் உள்ளன. மேலும், நோயாளிகளின் சேவைக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய 4 அவசர சிகிச்சை ஊர்திகளும் செயல்பாட்டில் உள்ளன இங்கு  உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கு  எந்நேரமும் உயிர்காக்கும் மருத்துவ சேவை உலகத் தரத்துடன் வழங்கப்பட்டு வருகிறது. நோயாளியின் உறவினர்களுக்கும் மீனாட்சி மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவின் மூலம் முதலுதவி குறித்த பயிற்சியும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com