Enable Javscript for better performance
"துப்புரவு தொழிலாளர்களின் இறப்பு விகிதத்தைக் குறைக்க வேண்டும்'- Dinamani

சுடச்சுட

    

    "துப்புரவு தொழிலாளர்களின் இறப்பு விகிதத்தைக் குறைக்க வேண்டும்'

    By DIN  |   Published on : 13th July 2019 07:34 AM  |   அ+அ அ-   |    |  

    துப்புரவு தொழிலாளர்களின் இறப்பு விகிதத்தைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் தேசிய துப்புரவு தொழிலாளர்கள் ஆணைய உறுப்பினர் ஜகதீஷ் ஹிர்மானி.
    தஞ்சாவூர் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் அவர் பேசியது:
    துப்புரவு தொழிலாளர்களின் குழந்தைகளுக்குச் சுயதொழில் தொடங்குவதற்காக தாட்கோ மூலம் கடனுதவி வழங்கப்படுவது குறித்து நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட வேண்டும். துப்புரவு தொழிலாளர்களின் குழந்தைகளைத் தொழில்முனைவோராக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
    துப்புரவு தொழிலாளர்களுக்கு நாள் ஊதியம் குறைந்தபட்சமாக ரூ. 450 வழங்கப்பட வேண்டும். தற்காலிக ஊழியர்களுக்கும் நியாயமான ஊதியத்தை வழங்க வேண்டும். 
    துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குழந்தைகள் மிக மோசமான சுற்றுச்சூழலில் வாழ்ந்து வருகின்றனர். இதனால், துப்புரவு தொழிலாளர்களில் 80 சதவீதம் பேர் ஓய்வுக்கு முன்பாகவே இறப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. எனவே, அவர்களது ஆரோக்கியத்துக்கு அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
    மத்திய அரசு 2022 ஆம் ஆண்டுக்குள் வீடு இல்லாத அனைவருக்கும் வீடு கட்டித் தர திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் சொந்த வீடு இல்லாத துப்புரவு தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். வீடு இல்லாமல் எத்தனை துப்புரவு தொழிலாளர்கள் உள்ளனர் என்பது குறித்து பட்டியல் தயாரிக்க வேண்டும். மாவட்டத்தில் மொத்தமுள்ள 2,500 துப்புரவு தொழிலாளர்களில் 2,000 பேருக்கு வீடு இல்லை எனக் கூறப்படுகிறது. இவர்களுக்கு ஓராண்டுக்குள் வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
    இந்தியாவில் துப்புரவு தொழிலாளர்களின் இறப்பு விகிதம் தமிழ்நாட்டில்தான் அதிகமாக உள்ளது. இதைத் தடுக்கும் விதமாகத் துப்புரவு தொழிலாளர்களுக்கு நவீன கருவிகள் வழங்கப்படவுள்ளது. மேலும், இறப்பு விகிதத்தை பூஜ்யமாக்குவதற்கு தமிழக அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    மனிதன் மூலமாகக் கழிவுகள் அகற்றும் முறையைத் தடுப்பது குறித்து மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம், பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும். 
    துப்புரவு பணியில் அயலாக்கம் மூலம் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை நிரந்தப் பணியாளர்களாக்க வேண்டும் என தமிழகத் தலைமைச் செயலரிடம் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பான நடவடிக்கை படிப்படியாக மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தலைமைச் செயலர் கூறியுள்ளார். 
    துப்புரவு தொழிலாளர்கள் யாராவது வன்கொடுமைக்கு ஆளானால், ஆணையத்துக்குப் புகார் அளிக்கலாம். இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். வன்கொடுமை செய்தவர்களைப் பணியிடை நீக்கம் செய்வதற்கும் ஆணையத்துக்கு அதிகாரம் இருக்கிறது என்றார் ஜகதீஷ் ஹிர்மானி
    கூட்டத்தில் ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேஸ்வரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பி. மந்திராசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp