பேராவூரணி அருகே அம்மா திட்ட சிறப்பு முகாம்
By DIN | Published On : 13th July 2019 07:33 AM | Last Updated : 13th July 2019 07:33 AM | அ+அ அ- |

பேராவூரணியை அடுத்த ஆவணம் தொடக்கப் பள்ளியில் அம்மா திட்ட சிறப்பு முகாம் மற்றும் மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு பேராவூரணி சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் ரமேஷ் தலைமை வகித்தார். பேராவூரணி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி. செளந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். மண்டல துணை வட்டாட்சியர் சீனிவாசன், வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன், கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ் ஆகியோர் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றனர்.
முகாமையொட்டி நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில், கர்ப்பிணி பெண்களுக்கு பரிசோதனைகளும், மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. மேலும், கர்ப்பிணி தாய்மார்களுக்கு அம்மா ஊட்டச்சத்து பெட்டகங்கள், செருவாவிடுதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், கீரைகள் வழங்கப்பட்டது.
முகாமிற்கு வருகை தந்த பொதுமக்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.