குடிமராமத்து திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர், அம்மாபேட்டை ஒன்றியங்களில் ரூ. 57.30 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர், அம்மாபேட்டை ஒன்றியங்களில் ரூ. 57.30 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராமத்து திட்டப் பணிகளை ஆட்சியர் ஆ. அண்ணாதுரை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார். 
பூதலூர் ஊராட்சி ஒன்றியம், மாரனேரி, தொண்டராயன்பாடி, சித்திரக்குடி, சித்தாயல் ஆகிய கிராமங்களில் 2430.77 ஏக்கர் பயன்பெறும் வகையில் ஆனந்த காவிரி வாய்கால் பாசன சங்க விவசாயிகள் மூலம் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ. 37.30 லட்சம் மதிப்பில் இரு மதகுகள் மராமத்து பணி,  40 மீட்டர் நீளத்தில் தடுப்பு சுவர் அமைக்கும் பணியை ஆட்சியர் ஆய்வு செய்தார். மேலும், 19 கி.மீ. தொலைவுக்கு கச்சமங்கலம் முதல் கள்ளப்பெரம்பூர் ஏரி வரை உள்ள ஆனந்தகாவிரி வாய்காலை தூர்வாரி கரைகளைப் பலப்படுத்தும் பணியைத் தொடங்கி வைத்தார். இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். முன்னதாக, அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆத்தூர் ஊராட்சியில் வெண்ணாற்றில் ரூ. 20 லட்சம் மதிப்பில் தடுப்புச் சுவர் குடிமராமத்து திட்டத்தின் கீழ் கட்டும் பணியை ஆட்சியர் தொடங்கி வைத்தார். ஆய்வின்போது, உதவி செயற்பொறியாளர் அய்யம்பெருமாள், உதவிப் பொறியாளர் பூங்கொடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com