சுடச்சுட

  


  பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டையில் அம்மா  திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
  பாபநாசம் பேரூராட்சிக்குள்பட்ட சூலமங்கலம்  இரண்டாம் சேத்தி கிராமத்துக்காக நடத்தப்பட்ட முகாமுக்கு, வட்டாட்
  சியர் கண்ணன் தலைமை வகித்தார்.
  பட்டா மாறுதல், வீட்டுமனைப் பட்டா, முதியோர், மாற்றுத் திறனாளி உதவித்தொகைக் கோருதல்,  குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் அளித்த 26 மனுக்களைப் பெற்றுக் கொண்ட வட்டாட்சியர், விசாரணையின் அடிப்படையில் தீர்வு காண உத்தரவிட்டார்.   
  தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கான ஆணைகளையும் அவர் வழங்கினார்.
   மண்டலத் துணை வட்டாட்சியர் செல்வராஜ், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் கார்த்திகேயன், வருவாய் அதிகாரி மஞ்சுளா,கூட்டுறவு சங்க இயக்குநர்கள் எஸ்.என்.சேகர், பழனிசாமி, கே.முருகன், கிராம நிர்வாக அலுவலர்  கதிர்வேல், உதவியாளர் எஸ்.பாஸ்கரன் உள்
  ளிட்டோர் முகாமில் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai