சுடச்சுட

  

  தஞ்சாவூரில் சிஐடியு பொன் விழா ஆண்டு பேரணி, பொதுக்கூட்டம்

  By DIN  |   Published on : 14th July 2019 03:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  தஞ்சாவூரில் சிஐடியு பொன் விழா ஆண்டு, மாவட்ட மாநாட்டை முன்னிட்டு, பேரணி, பொதுக்கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
  தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா அருகில் இப்பேரணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் கோ. நீலமேகம் தொடங்கி வைத்தார். அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை சாலை, அண்ணாசிலை வழியாக ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் பேரணி  முடிவடைந்தது.
  பின்னர், நடைபெற்ற பொதுக் கூட்டத்துக்கு சிஐடியு மாவட்டச் செயலர் சி. ஜெயபால் தலைமை வகித்தார்.
  மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரெங்கராஜன் சிறப்புரையாற்றினார். சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் மாலதி சிட்டிபாபு, மாநிலத் துணைப் பொதுச் செயலர் வி. குமார், மாவட்டத் தலைவர் வி. கோவிந்தராஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  இதில், கட்டுமான, முறைசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ. 6,000, திருமண உதவித்தொகை ரூ. 50,000, இயற்கை மரணத்துக்கு ரூ. 1 லட்சம் வழங்க வேண்டும். முறைசாரா தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஓய்வூதியத்தை உடனே வழங்க வேண்டும்.
  கட்டுமானப் பொருள்களான மணல், செங்கல், சிமென்ட், ஜல்லி விலை உயர்வைக் குறைக்க வேண்டும். சாலையோர, தரைக்கடை சிறு வியாபாரிகளுக்கு தேசிய அடையாள அட்டை, வங்கிக் கடன் வழங்க வேண்டும். நூறு நாள் வேலையை 150 நாள்களாக உயர்த்தி, ஊதியம் ரூ. 400 ஆக வழங்க வேண்டும். மாட்டு வண்டியில் மணல் எடுக்க தனி மணல் குவாரி அமைக்கப்பட வேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.  தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மாவட்ட மாநாடு நடைபெறுகிறது.
  மக்கள் இயக்கமாக மாற வேண்டும்
  காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்ற வேண்டுமானால், அரசியல் கட்சிகள் மட்டும் போராடினால் போதாது. அது மக்கள் இயக்கமாக மாற வேண்டும்.  அவ்வாறு மாற்றப்படாவிட்டால், தமிழகத்தில் வாக்குகள் கிடைக்காது என்ற நிலையை உருவாக்க வேண்டும். 
  எந்தப் புதிய திட்டமாக இருந்தாலும், அதுகுறித்து அப்பகுதி மக்களின் ஒப்புதலைப் பெற வேண்டும். ஒப்புதலைப் பெறாமல் கொண்டு வருவது சரியல்ல. 
  சிஐடியு பொன்விழா ஆண்டையொட்டி சென்னையில் அகில இந்திய மாநாடு விரைவில் நடைபெறவுள்ளது. இதில், நாடு முழுவதும் 2,000 பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரெங்கராஜன்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai