சுடச்சுட

  

  பாஜகவைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

  By DIN  |   Published on : 14th July 2019 03:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  பாஜகவைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் தஞ்சாவூர் மாவட்டத்தில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
  கர்நாடகம், கோவா மாநிலங்களில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களை இழுத்து ஜனநாயக படுகொலை முயற்சியில் ஈடுபட்டு வரும் பாஜகவை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  தஞ்சாவூர் ரயிலடியில் மாநகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாநகர் மாவட்டத் தலைவர்  பி.ஜி. ராஜேந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டத் தலைவர் நாஞ்சி கி. வரதராஜன், நிர்வாகிகள் ஏ. ஜேம்ஸ், கோவி. மோகன், கே. கோவிந்தராஜன், வி.ஆர். குணசேகரன், ஆர். பழனியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர்.
   தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன்பு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தெற்கு மாவட்டத்  தலைவர் து. கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை வகித்தார். இதில்,  சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் பேராவூரணி சிங்காரம், மாவட்டத் துணைத் தலைவர் கோ. அன்பரசன், பொருளாளர் வயலூர் எஸ். ராமநாதன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மகேந்திரன், ஐஎன்டியுசி மாவட்டப் பொதுச் செயலர் மோகன்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  திருவையாறு பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டி.ஆர். லோகநாதன் தலைமை வகித்தார். இதில், மாவட்டப் பொருளாளர் முருகராஜ், மகளிர் அணி மாநில துணைத் தலைவர் மரகதவள்ளி உள்ளிட்டோர் பங்கேற்று, பா.ஜ.க.வை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai