ஹைட்ரோ கார்பன் திட்டம்: விவசாயிகளை ஒருங்கிணைத்து தொடர் போராட்டம்

ஒரத்தநாடு வட்டத்துக்குள்பட்ட பகுதியில்ஹைட்ரோ கார்பனை எடுக்க முயற்சித்தால், விவசாயிகளை ஒருங்கிணைத்து தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று திருவோணம் வட்டார விவசாயிகள் நலச்சங்கம்


ஒரத்தநாடு வட்டத்துக்குள்பட்ட பகுதியில்ஹைட்ரோ கார்பனை எடுக்க முயற்சித்தால், விவசாயிகளை ஒருங்கிணைத்து தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று திருவோணம் வட்டார விவசாயிகள் நலச்சங்கம் அறிவித்துள்ளது.
இசங்கத்தின் ஒன்றியச் செயற்குழுக் கூட்டம் தலைவர் ஆர். ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: திருவோணம்  ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் ஹைட்ரோகார்பனை எடுக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. பல ஆண்டுகளாக இப்பகுதியில் விவசாயம் செய்து வரும்  இப்பகுதியில் ஹைட்ரோகார்பனை எடுக்க அனுமதிக்கமாட்டோம். அதையும் மீறி எடுக்க முயற்சித்தால் விவசாயிகளை ஒன்று திரட்டி, மத்திய  மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தப்படும்.
சிவவிடுதி ஊராட்சியில் மணிக்கிரான் குளம் வழியாக பில்லைக்குறிச்சி செல்லும்  உழவயல் வாய்க்கால் கீழக்கரையில் புல்கள் மண்டி காடுபோல காட்சியளிக்கின்றன. எனவே இதனை சீரமைத்துத் தர வேண்டும்.  காரியாவிடுதி ஊராட்சியில் இயங்கி வந்த துணை சுகாதார மையம்  பழுதடைந்ததால் தற்போது கட்டட வசதியின்றி  நோயாளிகள்,பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சுகாதார மையத்துக்கு புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின்   ஒன்றியச் செயலர் வி.கே.சின்னத்துரை, துணைச் செயலர் வ.பெ.தங்கராசு, பொருளாளர் கே.பி.துரைராஜ், செயற்குழு உறுப்பினர்கள் சி.ஆர்.அன்பழகன்,எம்.பெரியசாமி, வீ.முருகேசன், ஆர்.கோவிந்தராசு உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com