ராஜகிரி அய்யனார் கோயில் குளத்தில் தூர்வாரும் பணி
By DIN | Published On : 15th July 2019 08:43 AM | Last Updated : 15th July 2019 08:43 AM | அ+அ அ- |

பாபநாசம் வட்டம், ராஜகிரி ஊராட்சியிலுள்ள அய்யனார் கோயில் குளத்தில் தூர்வாரும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற இக்கோயிலின் குளத்தைச் சுற்றி குப்பைகள், கழிவுகள் போன்றவை தேங்கிக் கிடந்தன. இதைத் தொடர்ந்து மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணியாளர்களைக் கொண்டு, ராஜகிரி கோயில் குளம் ஞாயிற்றுக்கிழமை தூர்வாரப்பட்டது.
மேலும், குளத்தில் சேர்ந்திருந்த நெகிழிக் கழிவுகள், குப்பைகள் போன்றவையும் அகற்றப்பட்டன. இப்பணியை வட்டார வளர்ச்சி அலுவலர் ( கிராம ஊராட்சிகள்) பி. அறிவானந்தம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அரவிந்தன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
ராஜகிரி ஊராட்சிச் செயலர் கலையரசன் மேற்பார்வையில் தூர்வாரும் பணி நடைபெற்றது.