மெலட்டூரில் கண் சிகிச்சை முகாம்
By DIN | Published On : 19th July 2019 04:59 AM | Last Updated : 19th July 2019 04:59 AM | அ+அ அ- |

பாபநாசம் வட்டம், மெலட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் அஜந்தன் தலைமை வகித்து முகாமை தொடக்கி வைத்தார்.
முகாமில், கண் மருத்துவர் ரங்கராஜன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவச கண் சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினார்.
முகாமில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். இவர்களில் 7 பெண்கள் உள்ளிட்ட 11 பேர் அறுவைச் சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.