Enable Javscript for better performance
அதிராம்பட்டினம் கல்லூரியில் மழைநீர் சேகரிப்புவிழிப்புணர்வு கருத்தரங்கம்- Dinamani

சுடச்சுட

    

    அதிராம்பட்டினம் கல்லூரியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

    By DIN  |   Published on : 25th July 2019 09:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட அமைப்பு சார்பில்,  மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் (பொ) எம். முகமது முகைதீன் தலைமை வகித்தார். பேராசிரியர்கள்  எஸ்.பி.கணபதி, ஏ.அம்சத், எஸ். சாபிரா பேகம் ஆகியோர் பேசுகையில்,  மழை நீரை சேமிப்பதன் அவசியம் குறித்தும், அதனால் ஏற்படும் பயன்கள் குறித்தும் விளக்கினர்.  மழைநீரை சேமித்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வேண்டியதன் அவசியத்தை மாணவர்கள், பொதுமக்களிடம் எடுத்துக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றனர்.  
     இதைத் தொடர்ந்து, மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்தல் குறித்து வரைபடத்துடன் கூடிய விளக்கக் குறிப்புகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்ற பேராசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டன.
    நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் பேராசிரியர்கள் ஜெ. முகமது அலி, ஏ. அப்ரூஸ் பானு, ஜி.ஆர். ஞானராஜா, ஜெ. சாஜித் இக்பால் ஆகியோர் செய்திருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai