Enable Javscript for better performance
அனுமதியின்றி பேரணி நடத்தியதாக 7 பேர் மீது வழக்குப் பதிவு- Dinamani

சுடச்சுட

    

    அனுமதியின்றி பேரணி நடத்தியதாக 7 பேர் மீது வழக்குப் பதிவு

    By DIN  |   Published on : 25th July 2019 09:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை அனுமதியின்றி பேரணி நடத்தியதாக 7 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
    காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் டான்டெக்ஸ் ரவுண்டானாவிலிருந்து ஆட்சியரகம் வரை காவிரி படுகை பாதுகாப்புக் கூட்டியக்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை பேரணி நடைபெற்றது. பின்னர் ஆட்சியரகம் முன் தர்னா போராட்டம் நடத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். 
    முன்னதாக, இந்தப் பேரணிக்கு அனுமதி வழங்கக் கோரி காவல் துறையினரிடம் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர்கள் கடிதம் அளித்தனர். இதற்குக் காவல் துறை அனுமதி வழங்கவில்லை. 
    எனவே, அனுமதியின்றி பேரணி நடத்தியதாகக் கூறி, கூட்டியக்கத்தைச் சேர்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் என்.வி. கண்ணன், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலர் அய்யனாபுரம் சி. முருகேசன், தாளாண்மை உழவர் இயக்கத் தலைவர் கோ. திருநாவுக்கரசு, காவிரி சமவெளி பாதுகாப்புக் கூட்டமைப்புத் தலைவர் ஜெய்சங்கர், விவசாய சங்கங்களின் கூட்டியக்கத் துணைத் தலைவர் கக்கரை ஆர். சுகுமாரன், மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஜி. ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செந்தில் 
    ஆகியோர் மீது தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai