Enable Javscript for better performance
ஆதனூரில் கடன் அட்டை விழிப்புணர்வு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    பேராவூரணி பேரூராட்சி ஆதனூரில் விவசாயிகள் கடன் அட்டை பெறுவது குறித்த விழிப்புணர்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.
    முகாமிற்கு வேளாண்மை உதவி இயக்குநர் எஸ். மாலதி தலைமை வகித்தார். வேளாண்மை அலுவலர் ராணி, வேளாண்மை உதவி அலுவலர்கள் கோகிலா,  தீபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.மாலதி பேசுகையில் ,  விவசாயிகள் விவசாயம் செய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் ரூ. 1.60 லட்சம் வரை பிணை இல்லாமல்  4% வட்டியில் கடன் பெற்று குறிப்பிடப்பட்ட தேதிக்குள் கடன் தொகையை  கட்டி பயனடையலாம் என்றும்,  கடன் அட்டை பெறும் வழிமுறைகள் பற்றியும் விளக்கினார். 
    கிராம நிர்வாக அலுவலர் அன்பரசி பேசும்போது,  மத்திய அரசின் கிசான் திட்டம் மூலம் ரூ. 6,000 பெறாதவர்களுக்கு தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விவசாயிகளின்  வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. 
    விண்ணப்பங்கள் கொடுக்காதவர்களும், தள்ளுபடி செய்யப்பட்ட மனுதாரர்களும் தகுந்த ஆவணங்களுடன்  தொடர்பு கொள்ளலாம் என்றார். 
    முகாமில் ஆதனூர் கிராம பிரமுகர்கள்  மான்சிங்,  சக்கரியாஸ்,  பிரட்ரிக்,  இருதயராஜ், பிரான்சிஸ் கண்டாக், கோஸ்துரை,  பவுன்துரை உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai