Enable Javscript for better performance
காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வருவாய்த் துறை அலுவலர்கள் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வருவாய்த் துறை அலுவலர்கள் வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 25th July 2019 09:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலகில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழ் மாநில வருவாய்த் துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
    தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாவட்டச் செயற் குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
    தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலகில் துணை வட்டாட்சியர்களுக்கு நீதித் துறைப் பயிற்சிக்குக் கடந்த காலங்களில் 8 பேர் வரை அனுப்பப்பட்ட நிலையில்,  தற்போது 4 பேர் மட்டுமே அனுப்பப்படுகின்றனர். இதனால், நீதித் துறைப் பயிற்சி முடிப்பதற்குக் கால தாமதம் ஏற்படுகிறது. எனவே, கடந்த காலங்களில் உள்ளதைப் போன்று நீதித் துறைப் பயிற்சிக்கு 8 பேரை அனுப்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    வருவாய்த் துறை அலுவலர்களுக்கு பவானிசாகரில் அடிப்படை பயிற்சி அளிப்பது காலதாமதமாகிறது. இதனால், பவானிசாகர் அடிப்படை பயிற்சி முடிக்காத காரணத்தால் பதவி உயர்வு கால தாமதம் ஏற்படுகிறது. எனவே, வருவாய்த் துறை அலுவலர்களை அதிக அளவில் பவானிசாகர் பயிற்சிக்கு அனுப்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலகில் காலிப் பணியிடங்களுக்கு உடனடியாக தகுதியான நபரை பதவி உயர்வு செய்து, காலிப் பணியிடத்தைக் கால தாமதமின்றி நிரப்ப வேண்டும். தமிழக அரசில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவருக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர். தங்க பிரபாகரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் தரும. கருணாநிதி, பொருளாளர் எம். அய்யம்பெருமாள், துணைத் தலைவர் ஜி. சக்கரவர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai