Enable Javscript for better performance
சிறுமிக்குப் பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை- Dinamani

சுடச்சுட

    

    சிறுமிக்குப் பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

    By DIN  |   Published on : 25th July 2019 09:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கும்பகோணம் அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையை தஞ்சாவூர் நீதிமன்றம் புதன்கிழமை  விதித்தது.
    கும்பகோணம் அருகே தாராசுரம் அம்மாபேட்டையைச் சேர்ந்தவர் கே. காத்தையன் (62). கூலி தொழிலாளி. இவர் 2015, ஆக. 21ஆம் தேதி ஒன்பது வயது சிறுமியை தனது வீட்டுக்கு வலுக்கட்டாயமாக இழுத்து சென்றார். பின்னர், அச்சிறுமியின் வாயைப் பொத்தி வீட்டின் பின்புறம் இழுத்து சென்று, பாலியல் தொல்லை கொடுத்தார்.
    இதுகுறித்து கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதன் பேரில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்புச் சட்டத்தின் (போக்சோ) கீழ் போலீஸார் வழக்குப் பதிந்து காத்தையனை கைது செய்தனர். இதுதொடர்பாக தஞ்சாவூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி எம். எழிலரசி விசாரித்து,  காத்தையனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்து புதன்கிழமை தீர்ப்பளித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai