Enable Javscript for better performance
சிறுமியைப் பாலியல் வல்லுறவு செய்த துப்புரவுத் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை- Dinamani

சுடச்சுட

    

    சிறுமியைப் பாலியல் வல்லுறவு செய்த துப்புரவுத் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

    By DIN  |   Published on : 25th July 2019 09:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கும்பகோணத்தில் சிறுமியைப் பாலியல் வல்லுறவு செய்த தொழிலாளிக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் புதன்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது.
    கும்பகோணம் ஏ.ஆர்.ஆர். காலனியை சேர்ந்தவர் அடைக்கலம் (59). துப்புரவுத் தொழிலாளி. இவர் 2015 ஆம் ஆண்டு மே மாதம் தனது வீட்டுக்கு டி.வி. பார்க்க வந்த 15 வயது சிறுமிக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்தார். 
    இதைக் குடித்த சிறுமி மயக்கமடைந்தார். அப்போது, இச்சிறுமியை அடைக்கலம் பாலியல் வல்லுறவு செய்தார். இதனால்,  அச்சிறுமி கர்ப்பம் அடைந்தார். பின்னர், அவருக்குக் கர்ப்பம் கலைந்தது. 
    இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைத் தடுப்புச் சட்டத்தின் (போக்சோ) கீழ் போலீஸார் வழக்குப் பதிந்து அடைக்கலத்தை கைது செய்தனர்.
    இதுதொடர்பாக தஞ்சாவூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி எம். எழிலரசி விசாரித்து, அடைக்கலத்துக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்து புதன்கிழமை தீர்ப்பளித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai