Enable Javscript for better performance
திருவிடைமருதூர், திருப்பனந்தாளில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    திருவிடைமருதூர், திருப்பனந்தாளில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

    By DIN  |   Published on : 25th July 2019 09:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் ஒன்றியங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை ஆட்சியர் ஆ. அண்ணாதுரை புதன்கிழமை ஆய்வு செய்தார்.
    திருவிடைமருதூர் ஒன்றியத்தில் உள்ள ஆடுதுறை அரசு மருத்துவமனை, மருத்துவக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நியாய விலை கடை,  பிற்படுத்தபட்டடோர் நல மாணவர் விடுதி, ஆடுதுறை பேரூராட்சியில் வறட்சி நிவாரண நிதியின் கீழ் மூன்று இடங்களில் ரூ. 10 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படுவது ஆகியவற்றை பார்வையிட்டார்.
    திருப்பனந்தாள் ஒன்றியம்,  திருகோடிக்காவல் திருகுளம் அருகே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்படுவது, கதிராமங்கலம் ஊராட்சியில் மணல்மேட்டு தெருவில் சிறுபாலம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்படுவது, பந்தநல்லூர் பசுபதீசுவரர் கோயில் அகழி தூர்வாரப்படுவது, பந்தநல்லூர் ஊராட்சி அலுவலகத்தில் மழைநீர் சேகரிப்பு அமைக்கப்படுவது, முள்ளங்குடி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பண்ணைக்குட்டை அமைக்கப்படுவது உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.
    அப்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜ், முருகன், வட்டாட்சியர் சிவக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai