Enable Javscript for better performance
தொழிலாளி மரணம்; போலீஸார் விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    ஒரத்தநாடு அருகே விவசாய நிலத்தில் வேலை பார்த்த கூலி தொழிலாளி புதன்கிழமை இறந்து கிடந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறப்படுவதாவது:
    கொரடாச்சேரி அருகேயுள்ள திட்டாணிமுட்டம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (50).  இவர் தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் பகுதியில் வசித்து வரும் அரசு மருத்துவர் செந்தில் குமார் என்பவருக்கு சொந்தமான ஒரத்தநாடு வட்டம் ஓக்கநாடு கீழையூரிலுள்ள விவசாய நிலத்தில் கூலி வேலை பார்க்க கடந்த 10 நாள்களுக்கு முன்பு சென்றாராம். 
    இந்நிலையில்,  புதன்கிழமை மாலை செந்தில்குமாரின் விவசாய நிலத்தில் குமார் மயங்கிய நிலையில் கிடந்ததாக கூறப்படுகிறது. 
    அப்பகுதியிலிருந்தவர்கள் அவரை ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனராம். 
    குமாரின் இறப்பு குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai