Enable Javscript for better performance
பலநோக்கு சமூகச் சேவை மைய பொன் விழா- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் பல நோக்கு சமூகச் சேவை மையத்தின் பொன் விழா தஞ்சாவூரில் புதன்கிழமை நடைபெற்றது.
    இந்த விழாவுக்குத் தலைமை வகித்த தஞ்சாவூர் மறை மாவட்ட ஆயர் எம். தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் ஆசியுரை வழங்கினார். இதில், பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், மையத்தின் 50 ஆண்டு காலச் சுவடுகள் என்ற காணொலி அறிக்கை ஒளிபரப்பப்பட்டது. பொன் விழா மலரை ஆயர் வெளியிட, அதை அடைக்கல மாதா ஆலயப் பங்குத் தந்தை ஏ. மைக்கேல் பெற்றுக் கொண்டார். தஞ்சாவூர் மறை மாவட்ட முதன்மைக் குரு டி. ஞானபிரகாசம்,  தமிழகச் சமூகப் பணி மைய இயக்குநர் ஆல்பர்ட் தம்பிதுரை, கோல்பிங் இந்தியா நலத்திட்ட இயக்குநர் ஏ. அந்தோணிராஜ், காரிதாஸ் இந்தியா நலத்திட்ட இயக்குநர் பால் மூஞ்சலி,   தஞ்சாவூர் பல நோக்கு சமூகச் சேவை மையச் செயலர் எஸ். அருளானந்து,  இயக்குநர் எப். ஆரோக்கியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai