Enable Javscript for better performance
பாபநாசத்தில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    பாபநாசத்தில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி

    By DIN  |   Published on : 25th July 2019 09:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாபநாசத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
    புதிய பேருந்து நிலைய வளாகத்தில் பேரணியை மாவட்ட வழங்கல் அலுவலர் ஆர். ஜெயபாரதி தலைமை வகித்து தொடக்கி வைத்தார். 
    பேரணியில்,  பாபநாசம் ஆர்டிபி கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த பதாகைகளை ஏந்தியபடி முழக்கமிட்டு சென்றனர். 
    பேரணி பாபநாசம்  வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது. நிகழ்ச்சியில் நுகர்வோர் விழிப்புணர்வு குறித்த துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களிடம் வழங்கப்பட்டன. 
    இதில், பாபநாசம் வட்டாட்சியர் கண்ணன், மண்டல துணை வட்டாட்சியர்கள் தர்மராஜ், செல்வராஜ், வருவாய் அதிகாரி ராஜேஷ்குமார்,  வட்ட வழங்கல்  அலுவலர் சீமான், பாபநாசம் காவல் ஆய்வாளர் நாகரெத்தினம்,  ஆர்.டி.பி. கல்லூரி பேராசிரியர்கள்  சி. ராஜலெட்சுமி,  சிவகுமார், பாபநாசம் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின்  தலைவர் வி.குழந்தைவேல், துணைத் தலைவர் சுப்ரமணியன், செயலாளர் மார்ட்டின்,  ஒருங்கிணைப்பாளர் ராஜ ராஜேஸ்வரி, மற்றும் வருவாய்த் துறை,  வட்ட வழங்கல் துறை, காவல் துறை அலுவலர்கள், கல்லூரி மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai