Enable Javscript for better performance
பாபநாசம் அருகே  பேருந்துகள்  மோதல்: 12 பேர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    பாபநாசம் அருகே புதன்கிழமை காலை பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில் 12 பேர் காயமடைந்தனர்.
    பாபநாசம் அருகேயுள்ள மலையபுரம் கிராமத்திலிருந்து பயணிகளுடன் தஞ்சாவூர் நோக்கி ஒரு நகரப் பேருந்து புதன்கிழமை காலை சென்று கொண்டிருந்தது.
    இதேபோல்,  வல்லத்திலுள்ள தனியார் நிகர்நிலை பல்கலைக்கழக பேருந்து நன்னிலத்திலிருந்து மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு வல்லம் நோக்கி வந்து கொண்டிருந்தது. 
    தஞ்சாவூர்-நாகை பிரதான சாலையில் கீழகோவில்பத்து ஊராட்சி,  உடையார்கோவில் கிராம பகுதியில் முன்னால் சென்று கொண்டிருந்த நகரப் பேருந்தை பல்கலைக்கழக பேருந்து முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. 
    அப்போது, எதிர்பாராதவிதமாக நகரப் பேருந்தின் பின்புறம் பல்கலைக்கழக பேருந்து மோதியதாக தெரிகிறது. இதில் நகரப் பேருந்தின் பின்பகுதி சேதமடைந்தது. பல்கலைக்கழக பேருந்தின் முன்பகுதியும் சேதமடைந்தது.
    இந்த விபத்தில் நகரப் பேருந்தில் பயணம் செய்த 4 பயணிகள் மற்றும் பல்கலைக்கழக பேருந்தில் பயணம் செய்த 6 மாணவ, மாணவிகள் மற்றும் பல்கலைக்கழக பேருந்து ஓட்டுநர், நடத்துநர் ஆகிய 12 பேர் காயமடைந்தனர். 
    காயமடைந்தவர்கள் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
    சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai