Enable Javscript for better performance
பேராவூரணியில் ஏஐடியுசி சிறப்பு பேரவை கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பேராவூரணியில் ஏஐடியுசி வட்ட சிறப்பு பேரவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை  நடைபெற்றது.
     பேரவைக்கு சுமைப்பணி தொழிலாளர் சங்க வட்டாரச் செயலாளர் கே.எஸ். முருகேசன் தலைமை வகித்தார். ஏஐடியுசி மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் எஸ்.தியாகராஜன் முன்னிலை வகித்தார். ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ஆர். தில்லைவனம் சிறப்புரையாற்றினார். 
    கூட்டத்தில், நலவாரியங்களுக்கு தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து முறையாக செயல்படுத்த வேண்டும். கட்டுமானப் பணிகளுக்கு தட்டுப்பாடின்றி மணல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்டு விடுபட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
    பேரவைக் கூட்டத்தில் வி.தொ.ச ராஜமாணிக்கம்,  டிஎன்சிஎஸ்சி சி.செளந்தர்ராஜன், கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கம் ஆர். மூர்த்தி, ஆர். நாகேந்திரன், சுமைப்பணித் தொழிலாளர் சங்கம் எம். சரவணன், ராஜேந்திரன், மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கம் ஆர்.வைத்தி, வீரமணி, தெரு வியாபாரிகள் சங்கம் முகமது ரபீக்,  பூக்கடை தொழிலாளர்கள் சங்கம் கலா,  சித்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai