Enable Javscript for better performance
பேராவூரணி வட்டார வளமையம் சார்பில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    பேராவூரணி வட்டார வளமையம் சார்பில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி

    By DIN  |   Published on : 25th July 2019 09:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பேராவூரணி வட்டார வளமையம் சார்பில், தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான, புதிய அனைத்து பாடப்புத்தகங்கள் குறித்த இரண்டு நாள் பயிற்சி வகுப்பு பேராவூரணி மற்றும் திருச்சிற்றம்பலத்தில்  திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது.
    பேராவூரணி வட்டார வளமையத்தில் நடைபெற்ற பயிற்சியை வட்டாரக் கல்வி அலுவலர் கோ. ரவிச்சந்திரனும்,   திருச்சிற்றம்பலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற பயிற்சியை வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரெ.பரமசிவமும்  தொடங்கி வைத்தனர். 
    முதல்கட்டமாக இரண்டு  நாள்கள் பயிற்சி நடைபெற்றது. தொடர்ந்து,  இரண்டாம் கட்டமாக 25, 26 ஆகிய தேதிகளில்  நடைபெற உள்ளது. பயிற்சியில்  85 பள்ளிகளைச் சேர்ந்த 2 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான தொடக்க நிலை ஆசிரியர்கள் சுமார் 214 பேர் கலந்து கொண்டனர். கருத்தாளர்களாக ஆசிரியர் பயிற்றுநர்கள் பரமேஸ்வரி,  இராம தனலெட்சுமி, பெமிலா இருதயமேரி, சித்ரா ஆகியோர் செயல்பட்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai