Enable Javscript for better performance
மாநில துப்பாக்கிச்சுடும் போட்டிக்கு அதிராம்பட்டினம் வீரர் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    மாநில துப்பாக்கிச்சுடும் போட்டிக்கு அதிராம்பட்டினம் வீரர் தேர்வு 

    By DIN  |   Published on : 25th July 2019 09:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் எஸ். வஜீர் அலி (45) .  ரைபிள் கிளப் உறுப்பினர். இந்நிலையில், பெரம்பலூர் ரைபிள் கிளப்பில் ஜூலை 20, 21 ஆகிய தேதிகளில் மாவட்ட அளவில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் சென்னை, திருச்சி, கோவை, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த  100-க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். 
    இப்போட்டியில் தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து அதிராம்பட்டினம் வீரர் வஜீர் அலி கலந்து கொண்டு,  10 மீட்டர் ஏர் பிஸ்டல் (என்ஆர் மற்றும் ஐஎஸ்எஸ்எப் ஆகிய பிரிவுகளில்) 2 வெண்கலப் பதக்கங்கள் வென்றார். இதையடுத்து இவர் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை கோயம்புத்தூரில் நடைபெறவுள்ள 45-வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். இதற்காக வஜீர் அலியை பலரும் நேரில் சந்தித்துப் பாராட்டி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai