Enable Javscript for better performance
மின் தடை புகாருக்கு 1912-இல் தொடர்பு கொள்ளலாம்- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் மாவட்டத்தில் மின்தடை தொடர்பான புகார்களுக்கு 1912 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தஞ்சாவூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் த.நா. சங்கரன் தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது: மின் நுகர்வோர் மின் தடை தொடர்பான புகார்களை உடனுக்குடன் சரி செய்ய 24 மணிநேரமும் இயங்கும் கணினிமயமாக்கப்பட்ட மின் தடை புகார் பதிவு மையம் தஞ்சாவூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உள்பட்ட பொதுமக்கள் தங்களது மின் தடை குறித்து புகார்களை 1912 மற்றும் 1800 - 425 - 2898 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களை 24 மணிநேரமும் தொடர்பு கொண்டு பதிவு செய்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai