Enable Javscript for better performance
முதல்வரின் நூறு ஏரிகள் திட்டம் பயன் தராது: காவிரி உரிமை மீட்புக் குழு- Dinamani

சுடச்சுட

    

    முதல்வரின் நூறு ஏரிகள் திட்டம் பயன் தராது: காவிரி உரிமை மீட்புக் குழு

    By DIN  |   Published on : 25th July 2019 09:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முதல்வர் அண்மையில் அறிவித்த நூறு ஏரி திட்டம் எந்த வகையிலும் செயல்படுத்த முடியாத திட்டம் என்பதால்,  அதைக் கைவிட வேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழு வலியுறுத்தியுள்ளது.
    இதுகுறித்து அக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தெரிவித்திருப்பது:
    சேலம் மாவட்டம்,  எடப்பாடியில் ஜூலை 21ஆம் தேதி நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  மேட்டூர் உபரிநீரை ரூ. 565 கோடியில் நூறு ஏரிகளில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம்,  மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி ஆகிய நான்கு தொகுதிகளில் ஏரிகளில் நீரை நிரப்புவதன் மூலம் நிலத்தடி நீர் செறிவூட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.
    இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் அளவுக்குக் காவிரியில் உபரி நீர் இல்லை. காவிரி - குண்டாறு திட்டம்,  இருவழியில் சென்னைக்குக் குடிநீர் திட்டம்,  புதிதாக முதல்வர் அறிவித்துள்ள சேலம் மாவட்ட 100 ஏரித் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டால், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களின் மரபுவழிப் பாசனத்துக்குத் தண்ணீர் மிச்சம் இருக்காது என்பது ஒருபுறமிருக்க, சேலம் மாவட்டத்தில் புதிதாக 100 ஏரிகளுக்குத் தண்ணீர் கிடைப்பதற்கும் வழியில்லை.
    சேலத்தில் காவிரி ஆற்றின் நீர்மட்டத்தைவிட நிலத்தின் மட்டம் மிக உயரமானது. எனவே, தண்ணீரை மோட்டார் மூலம் மேலே ஏற்றித்தான் கொண்டு போக முடியும். எனவே, எந்த வகையிலும் செயல்படுத்த முடியாத நூறு ஏரித் திட்டத்தை முதல்வர் கைவிட்டு, சேலம் மாநகரம், மாவட்ட மக்களுக்கு அன்றாடம் குடிநீர் கிடைக்கும் வகையில் ஒரு திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai