Enable Javscript for better performance
வீடுகளைக் காலி செய்ய நோட்டீஸ்: திருவையாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் திரண்ட மக்கள்- Dinamani

சுடச்சுட

    

    வீடுகளைக் காலி செய்ய நோட்டீஸ்: திருவையாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் திரண்ட மக்கள்

    By DIN  |   Published on : 25th July 2019 09:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவையாறு அருகேயுள்ள காருகுடி, ராயம்பேட்டை கிராமங்களில் வீடுகளைக் காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டதால், பாதிக்கப்பட்டுள்ள மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு புதன்கிழமை திரண்டு சென்று மனு அளித்தனர்.
    திருவையாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் காருகுடி, ராயம்பேட்டை கிராம மக்கள் அளித்த மனு:
    காருகுடி, ராயம்பேட்டை முதன்மைச் சாலையில் ஏறத்தாழ 180 குடும்பங்கள் நூறு ஆண்டுகளாக வசித்து வருகிறோம். நாங்கள் குடியிருந்து வரும் வீட்டுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு அரசிடமிருந்து பெற்று குடியிருக்கிறோம். நாங்கள் அனைவரும் தினக் கூலி வேலை பார்த்து வருகிறோம். 
    எங்களுக்கு இந்த வீட்டை விட்டால் வேறு வீடு இல்லை. இந்நிலையில் திருவையாறு நெடுஞ்சாலை துறை சார்பில் எங்களைக் காலி செய்ய சொல்லி நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் 15 நாட்களில் காலி செய்யாவிட்டால் நெடுஞ்சாலை துறையினரே எங்கள் வீட்டை இடித்து விட்டு, எங்களிடமே அதற்கான செலவினத் தொகையை வசூல் செய்வோம் என நோட்டீசில் கூறியுள்ளனர். 
    திடீரென காலி செய்ய சொன்னால், நாங்கள் எங்கே செல்வது? எனவே, எங்களுக்கு வேறு இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai