Enable Javscript for better performance
ஸ்கூட்டர் மீது கார் மோதியதில் தாய், மகன் உயிரிழப்பு- Dinamani

சுடச்சுட

    

    கும்பகோணம் அருகே செவ்வாய்க்கிழமை ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தில் தாய், மகன் உயிரிழந்தனர்.
    பாபநாசம் அருகேயுள்ள தியாகசமுத்திரத்தைச் சேர்ந்தவர் துரை. இவரது மனைவி கலையரசி (42). இவர் தனது மகன் கிஷோருடன் (20) ஸ்கூட்டரில் செவ்வாய்க்கிழமை தாராசுரம் அருகே மேலச்சத்திரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். 
    அப்போது, இவர்கள் மீது அந்த வழியாக வந்த கார் மோதியது. இதில், பலத்தக் காயமடைந்த கலையரசி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 
    பலத்தக் காயமடைந்த கிஷோர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு கிஷோர் புதன்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து கும்பகோணம் தாலுகா போலீஸார் விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai