முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
ஆலத்தூரில் கவிதை நூல் வெளியீட்டு விழா
By DIN | Published On : 30th July 2019 09:48 AM | Last Updated : 30th July 2019 09:48 AM | அ+அ அ- |

பட்டுக்கோட்டையை அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் அதே ஊரைச் சேர்ந்த பல் மருத்துவ மாணவர் இரா.நரேந்திரன் எழுதிய 'காற்றில் ஏறிக் கவிதை பாடுவோம்' என்ற கவிதை நூல் வெளியிட்டு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடை பெற்றது.
விழாவுக்கு பட்டுக்கோட்டை எம்எல்ஏ சி.வி.சேகர் தலைமை வகித்தார். மருத்துவர் மு.செல்லப்பன், ஆலத்தூர் ஊராட்சி முன்னாள் தலைவர் ஏ.ஆர்.எம். யோகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.கே.வி. பாரதிதாசன் கவிதை நூலை வெளியிட்டுப் பேசுகையில், கவிதையில் அதிக நாட்டமுள்ள இன்றைய மாணவர்கள், இளைஞர்கள் கவிச்சக்கரவர்த்தி கம்பன் போல சிறப்பான கவிதைகளை எழுத வேண்டும். அந்த கவிதைகள் சமுதாய வளர்ச்சிக்கு பயன்படுவதாய் அமைய வேண்டும் என்றார்.
கவிஞர் நந்தலாலா, பச்சையப்பன் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் சி.சுந்தரமூர்த்தி, கவிஞர்கள் இளையகம்பன், மாணிக்க சண்முகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தொடக்கத்தில், பட்டுக்கோட்டை மனோரா ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் ஏ.எஸ்.வீரப்பன் வரவேற்றார்.
நிறைவாக, நூலாசிரியர் இரா.நரேந்திரன் ஏற்புரை நிகழ்த்தி, நன்றி கூறினார்.