முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
நிதி நிறுவனத்தில் பூட்டை உடைத்து ரூ. 1.90 லட்சம் திருட்டு
By DIN | Published On : 30th July 2019 09:50 AM | Last Updated : 30th July 2019 09:50 AM | அ+அ அ- |

கும்பகோணம் அருகே நிதி நிறுவனத்தில் பூட்டை உடைத்து ரூ. 1.90 லட்சம் ரொக்கத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கும்பகோணம் நான்கு சாலை பாரதி நகரைச் சேர்ந்தவர் பி. கண்ணன் (61). இவர் திருப்பனந்தாள் முதன்மைச் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
வழக்கம்போல ஜூலை 27-ம் தேதி இரவு நிறுவனத்தைப் பூட்டிச் சென்ற இவர் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை காலை திறக்கச் சென்றார். அப்போது, முன்பக்கம் மரக்கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டுக் கிடந்தது.
மேலும், பீரோவில் இருந்த ரூ. 1.90 லட்சம் ரொக்கத்தையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து கண்ணன் அளித்த புகாரின்பேரில் திருப்பனந்தாள் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.