ஜாமீனில் வந்தவர் தூக்கிட்டு தற்கொலை
By DIN | Published On : 31st July 2019 09:59 AM | Last Updated : 31st July 2019 09:59 AM | அ+அ அ- |

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே ஜாமீனில் வந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாபநாசம் அருகே அம்மாபேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட கோவிலூர் ஊராட்சி,நெல்லித்தோப்பு கிராமம், ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்தவர் அய்யாசாமி மகன் சுந்தரமூர்த்தி (29). தஞ்சாவூரிலுள்ள துணிக்கடையில் வேலை பார்த்தபோது தஞ்சாவூர் அருகே ரெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெயக்கொடியை காதல் திருமணம் செய்தார். இவர்களுக்கு இரு மகன்கள்.
இந்நிலையில் கடந்த ஏப். 12 ஆம் தேதி ஏற்பட்ட தகராறில் சுந்தரமூர்த்தி தனது மனைவியை அடித்துக் கொன்ற சுந்தரமூர்த்தியை கள்ளப்பெரம்பூர் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த சுந்தரமூர்த்தி நெல்லித்தோப்பிலுள்ள வீட்டில் தாயுடன் வசித்து வந்தார். வேதனையில் இருந்த அவர் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அம்மாபேட்டை போலீஸார் விசாரிக்கின்றனர்.