செங்கல் சூளைகளில் கூட்டாய்வு
By DIN | Published On : 12th June 2019 08:31 AM | Last Updated : 12th June 2019 08:31 AM | அ+அ அ- |

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள செங்கல் சூளைகளில் செவ்வாய்க்கிழமை கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.
தஞ்சாவூர் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் சித்தார்த்தன் தலைமையில் தஞ்சாவூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) இர. கவிஅரசு, மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக அலுவலர் ரஞ்சித் உள்ளிட்டோர் திருவையாறு கொள்ளிடம் கரையை ஒட்டி ஒக்கக்குடி, தேவன்குடி, பட்டுகுடி, கூடலூர், புத்தூர், புதுக்குடி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள செங்கல் சூளைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் பணிபுரிகிறார்களா என்பது குறித்து சிறப்புக் கூட்டாய்வு மேற்கொண்டனர்.
மேலும் அய்யம்பேட்டை பகுதிகளில் உள்ள பயர் ஒர்க்ஸ், வாகனப் பணிமனைகள், கடைகள் என 20-க்கும் அதிகமான இடங்களில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.