சுடச்சுட

  

  தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே ஆற்றங்கரையில் வாயில் துணி கட்டப்பட்ட நிலையில் இளைஞர் புதன்கிழமை கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
  திருவையாறு அருகே பனவெளி கிராமத்தில் வெட்டாறு தென் கரையில் புதன்கிழமை காலை வாய் கட்டப்பட்ட நிலையில் இளைஞர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
  இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் சண்முகவேல் புகார் செய்தார். 
  இதையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேஸ்வரன், திருவையாறு காவல் துணைக் கண்காணிப்பாளர் பெரியண்ணன், ஆய்வாளர் ஜெகதீசன் உள்ளிட்டோர் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இறந்தவரின் தலையின் பின்புறத்தில் தாக்கப்பட்ட காயம் காணப்பட்டது. தஞ்சாவூரிலிருந்து வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் ராஜராஜன் குறிப்பிட்ட தொலைவு வரை ஓடிவிட்டு நின்றது. 
  மேலும், பிரசாந்தின் சடலத்தில் பதிவான ரேகைகளை விரல் ரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். 
  பின்னர் போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
  இதனிடையே போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், இறந்தவர் பாபநாசம் வட்டத்துக்கு உள்பட்ட மணலூரைச் சேர்ந்த வீரமணி மகன் பிரசாந்த் (19) என்பது தெரிய வந்தது. 
  சென்டிரிங் தொழிலாளியான இவர் இலுப்பக்கோரையைச் சேர்ந்த 17 வயதுடைய பிளஸ் 2 மாணவியை காதலித்து வந்தார். 
  இதனிடையே,  மாணவியைக் காணவில்லை என்றும்,  பிரசாந்த் கடத்திச் சென்றதாகவும் அவரது பெற்றோர் அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த 8ஆம் தேதி புகார் செய்தனர். இதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து,  இருவரையும் தேடி வந்தனர்.
  இந்நிலையில், பிரசாந்த் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதால், காதல் பிரச்னைதான் காரணமா? என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 
  இது தொடர்பாக உமையவள் ஆற்காடு கிராமத்தைச் சேர்ந்த இருவரை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai