திருவாரூர் ~ காரைக்குடி ரயில் சேவையில் மாற்றம்

திருவாரூர் ~ காரைக்குடி பயணிகள் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்தடத்தில் பயணிகள் டெமு ரயில்

திருவாரூர் ~ காரைக்குடி பயணிகள் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்தடத்தில் பயணிகள் டெமு ரயில் வாரத்தில் 6 நாள்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,  இனி வாரத்தில் 3 நாள்கள் மட்டுமே இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருவாரூர் ~காரைக்குடி இடையே பயணிகள் சிறப்பு ரயில் கடந்த ஜூன் 1 முதல் திருவாரூரிலிருந்து (வண்டி எண்: 06847) காலை 8.15 மணிக்குப் புறப்பட்டு திருத்துறைப்பூண்டி, தில்லைவிளாகம், முத்துப்பேட்டை,  அதிராம்பட்டினம்,  பட்டுக்கோட்டை,  ஒட்டங்காடு, பேராவூரணி, ஆயங்குடி, அறந்தாங்கி, வாளரமாணிக்கம், பெரியகோட்டை, கண்டனூர், புதுவயல் வழியாக காரைக்குடி ரயில் நிலையத்திற்கும்,  எதிர் மார்க்கத்தில், காரைக்குடியில் இருந்து (வண்டி எண்: 06848) பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்பட்டு, இரவு 8.30 மணிக்கு திருவாரூர் ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தது. இந்த பயணிகள் ரயில் சேவை வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாள்கள்  இயங்கும் என ஏற்கெனவே தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.
இந்நிலையில், புதன்கிழமை (ஜூன் 12) முதல்,  வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாள்களில் திருவாரூரிலிருந்து காலை 8.15 மணிக்கு புறப்பட்டு,  மாலை 4.15 மணிக்கு காரைக்குடி சென்றடையும் என்றும், செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாள்களில் காரைக்குடியில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்பட்டு,  மாலை 5.45 மணிக்கு திருவாரூர் வந்தடையும் என்றும்,  பின்னர், அதே ரயில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.10 மணிக்கு திருச்சிக்கு செல்லும் என்றும், அங்கிருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு திருவாரூர் ரயில் நிலையத்திற்கு இரவு 10.45 மணிக்கு வந்து சேரும் என்றும் தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com