தஞ்சாவூரில் ஜூன் 15, 16-இல் குடிநீர் விநியோகம் இருக்காது
By DIN | Published On : 14th June 2019 09:39 AM | Last Updated : 14th June 2019 09:39 AM | அ+அ அ- |

தஞ்சாவூர் மாநகராட்சிக்குச் சொந்தமான திருமானூர் தலைமை குடிநீர் நீரேற்று நிலையத்திலிருந்து தஞ்சாவூர் நகர் பகுதிக்குக் குடிநீர் விநியோகம் செய்யும் பிரதான குழாய்களில் பழுதுகள் ஏற்பட்டு, தண்ணீர் வீணாகி வருகிறது.
இக்குடிநீர் கசிவுகளைச் சீர் செய்யும் பணி நடைபெறவுள்ளதால் வார்டு எண் 1 முதல் 51 வரையிலான அனைத்து வார்டுகளிலும் ஜூன் 15, 16-ம் தேதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது. எனவே, பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரைச் சேமித்து வைத்துக் கொள்ளுமாறும், குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் மாநகராட்சி செயற் பொறியாளர் த. ராஜகுமாரன் தெரிவித்துள்ளார்.