உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெல்ல கூட்டு வழிபாடு
By DIN | Published On : 14th June 2019 09:38 AM | Last Updated : 14th June 2019 09:38 AM | அ+அ அ- |

இங்கிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்காக தஞ்சாவூர் கொடிமரத்து மூலையில் வியாழக்கிழமை கூட்டு வழிபாடு நடைபெற்றது.
தனியார் நிறுவனம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஒரு வாகனத்தில் அமைக்கப்பட்டிருந்த 6 அடி உயர மாபெரும் அகர்பத்தியை தஞ்சாவூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் ஏற்றிவைத்து, கூட்டு வழிபாட்டைத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், தனியார் நிறுவன விற்பனை பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த வாகனம் தஞ்சாவூர் முழுவதும் இரு நாட்களுக்குச் சுற்றி வரவும், இந்த வாகனத்தில் பொதுமக்கள் தங்களது பிரார்த்தனையை பதிவு செய்யும் விதமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.