தொழிலாளர் உரிமைகளைக் காக்க  வலியுறுத்தி சிஐடியு ஆர்ப்பாட்டம்

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தொழிற் சங்கம் அமைத்ததால், தொழிலாளர்கள் மீது பொய் வழக்குப்

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தொழிற் சங்கம் அமைத்ததால், தொழிலாளர்கள் மீது பொய் வழக்குப் போடுதல், கைது, பணி நீக்கம் என தொடரும் பழிவாங்கல் நடவடிக்கைகளைக் கண்டித்தும், தொழிலாளர் உரிமைகளைக் காக்க வலியுறுத்தியும் தஞ்சாவூர் ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் சிஐடியு அமைப்பினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாநிலம் எங்கும் வேலை செய்யும் இடங்களில் தொழிற்சங்கம் அமைத்தமைக்காகப் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும். தொழிலாளர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கைத் திரும்பப் பெற வேண்டும். டாஸ்மாக் நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் இடத்துக்கு,  எழுத்துத் தேர்வு நடத்தி டாஸ்மாக் ஊழியர்களைப் பணி நியமனம் செய்ய வேண்டும். 
தமிழக அரசு அறிவித்துள்ள எல்கேஜி,  யுகேஜி வகுப்புகளுக்கு அங்கன்வாடி ஊழியர்களை ஆசிரியர்களாக அறிவிக்க வேண்டும். இ - சேவை மைய ஊழியர்களுக்குச் சட்டப்படியான ஊதியம் வழங்க வேண்டும். நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இணையாக கூட்டுறவு நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். 
உள்ளாட்சித் துறைத் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதிய அரசாணைப்படி ஊதியத்தை வழங்க வேண்டும். தமிழகத்தில் மத்திய, மாநில அரசுப் பணிகளில் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாவட்டத் துணைச் செயலர் கே. அன்பு தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சி. ஜெயபால் சிறப்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் து. கோவிந்தராஜ், டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டச் செயலர் கே. வீரையன், மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் சங்க மாவட்டச் செயலர் கே. பாலமுருகன், மாவட்டத் தலைவர் கே. முருகேசன்,  தரைக்கடை வியாபாரிகள் சங்க மாவட்டத் தலைவர் மணிமாறன், ஆட்டோ சங்கக் கெளரவத் தலைவர் ஜெயராஜ், தஞ்சை நகராட்சி ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com