சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலை.யில் பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2019 - 20ஆம் ஆண்டுக்கான பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் வெளியிடப்பட்டது.

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2019 - 20ஆம் ஆண்டுக்கான பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் வெளியிடப்பட்டது.
இதுகுறித்து சாஸ்த்ரா பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முதல் வகையான 70 சதவீத இடங்களுக்கான (ஜே.இ.இ. (முதன்மை) மற்றும் பிளஸ் 2 ஒருங்கிணைந்த மதிப்பெண் அடிப்படையில்) பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலில் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் சைதன்யா ஜூனியர் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் கோவர்தன் சாய் சீனிவாஸ் 99.3235 சமன் செய்த மதிப்பெண் தரவரிசைப் பட்டியலில் தேசிய அளவில் முதலிடம் பெற்றார். சென்னையைச் சேர்ந்த பால வித்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்த மாணவர் பிரதீக் ரஞ்சன் மித்ரா (ஜே.இ.இ. (முதன்மை) மற்றும் பிளஸ் 2 ஒருங்கிணைந்த மதிப்பெண் அடிப்படையில்) தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு அளவில் முதலிடம் பெற்றார். இந்த மாணவர் பிளஸ் 2-வில் 493 மதிப்பெண்களும், ஜே.இ.இ. முதன்மைத் தேர்வில் 99.357 சதவீதமும் பெற்றார்.
இரண்டாம் வகையில் 30 சதவீதம் இடங்களுக்கான பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சமனப்படுத்தும் முறையில் தெலங்கானா மாநிலம்,  கரீம் நகர் சைதன்யா கலாசாலாவை சேர்ந்த மதுபு ஹரிகா 99.7984 மதிப்பெண்கள் பெற்று சமனப்படுத்தும் முறை அடிப்படையில் முதல் தகுதியைத் தேசிய அளவில் பெற்றார்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வெள்ளிக்கிழமை (ஜூன் 14) மாலை 5 மணி வரை பெறப்பட்டது. இரவு 9 மணிக்கு தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது நிகழாண்டு ஜே.இ.இ. மதிப்பெண்களுடன் விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட அதிக அளவு உயர்ந்துள்ளது.  எந்த நுழைவுத் தேர்வையும் நடத்தாமல் ஜே.இ.இ. மற்றும் பிளஸ் 2 மதிப்பெண்களை இணைத்து, அதன் 
அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துகிறது சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம். இவ்வாறு சேர்க்கை நடத்தும் ஒரே நிகர்நிலைப் பல்கலைக்கழகம் சாஸ்த்ரா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தர வரிசைப் பட்டியலில், கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டிய தேதி, நேரம் போன்ற விவரங்கள் மாணவர்களுக்கு  வலைதளத்தில் அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களது விவரங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தகுதி அடிப்படையில் வெளிப்படையான கலந்தாய்வு ஜூன் 20-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும். 
மொத்தம் உள்ள 1,800 இடங்களுக்கு 22,000-க்கும் அதிகமான விண்ணப்பங்கள் தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, ஜம்மு காஷ்மீர், கர்நாடகம், மகாராஷ்டிரம், தில்லி, குஜராத், உத்தரபிரதேசம், கோவா, பிகார், ராஜஸ்தான், அஸ்ஸாம், ஜார்கண்ட், கேரளம் போன்ற மாநிலங்களிலிருந்து கடந்த ஆண்டை விட 30 சதவீதம் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள், அந்தமான் நிகோபார் ஆகிய மாநில மாணவர்களுக்குச் சேர்க்கையில் தனிச்சலுகை வழங்கப்படும். 
தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தலா 10 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com