சமூகப் பொருளாதாரக் கணக்கெடுப்பு: மக்கள் ஒத்துழைக்க வேண்டுகோள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் தேசிய மாதிரி ஆய்வுத் திட்டச் சமூகப் பொருளாதாரக்

தஞ்சாவூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் தேசிய மாதிரி ஆய்வுத் திட்டச் சமூகப் பொருளாதாரக் கணக்கெடுப்புக்குப் பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்திருப்பது:
மத்திய அரசின் தேசிய மாதிரி ஆய்வு நிறுவனத்தின் தொழில்நுட்ப வழிகாட்டுதலின்படி தேசிய மாதிரி ஆய்வு திட்டச் சமூகப் பொருளாதாரக் கணக்கெடுப்பு தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகிறது.
ஆண்டுதோறும் குடும்பத்தின் நுகர்வு, செலவு, வேலைவாய்ப்பு, வேலைவாய்ப்பின்மை, நிலம், கால்நடை பராமரிப்பு, சுகாதாரம், கல்வி போன்ற பல்வேறு தலைப்புகளில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது.
தற்போது நடைபெறும் தேசிய மாதிரி ஆய்வு திட்டத்தின் (2019, ஜனவரி - டிசம்பர்) 77-வது சுற்றில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 12 கிராமப்புற மாதிரிகளிலும், 9 நகர்ப்புற மாதிரிகளிலும் கணக்கெடுப்புப் பணி நடைபெறுகிறது. 
தேர்விடப்படும் குடும்பங்களில் அவர்களது சொந்த நிலம், கால்நடைகள், சாகுபடிப் பரப்பு, சொத்துகள், வரவு - செலவு, விவசாயக் கருவிகள், கடன், அனைத்து வகையான சேமிப்பு ஆகியவை குறித்த விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
மக்களுக்குத் தேவையான திட்டங்களைத் தயாரிக்க உதவும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இக்கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ள தங்கள் வீடுகளுக்கு வரும் பொருளியல், புள்ளியியல் துறை கண்காணிப்பாளர்களிடம் அவர்கள் கோரும் விவரங்களைப் பொதுமக்கள் தயங்காமல் தெரிவித்து கணக்கெடுப்பைத் துல்லியமாக மேற்கொள்ள ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 
தங்களிடமிருந்து பெறப்படும் விவரங்கள் முற்றிலும் ரகசியமாக வைக்கப்படும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com