மழை வேண்டி சிறப்புத் தொழுகை
By DIN | Published On : 24th June 2019 10:46 AM | Last Updated : 24th June 2019 10:46 AM | அ+அ அ- |

திருத்துறைப்பூண்டி: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் தெற்கு மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகரம் சார்பாக ஞாயிற்றுக்கிழமை மழை வேண்டி சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
மாவட்ட துணைச் செயலர் யாசர் அரஃபாத் மழை வேண்டி தொழுகை நடத்தினார். இதில், மாவட்ட துனைச் செயலர் ஜமால், மாவட்ட மாணவரணிச் செயலர் ஹாஜா மைதீன், கிளைத் தலைவர் அன்வர்தீன், செயலர் முஹம்மது ஃபாரூக், பொருளாளர் ஹாஜா மைதீன், துணைத் தலைவர் ரசாது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.