சுடச்சுட

  

  நூறு நாள் வேலையை தொடர்ச்சியாக வழங்க வலியுறுத்தி விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டம்

  By DIN  |   Published on : 26th June 2019 09:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நூறு நாள் வேலையை தொடர்ச்சியாக வழ ங்க வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) மனு கொடுக்கும் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை நடத்தினர்.
  நூறு நாள் வேலைத் திட்டத்தை அனைத்து ஊராட்சிகளிலும் உடனடியாக தொடங்க வேண்டும். சட்டப்பூர்வ கூலியை குறைக்காமல் முழுமையாக வழங்க வேண்டும். நிலுவையிலுள்ள கூலியை உடனடியாக வழங்க வேண்டும். தொடர்ச்சியாக பணி வழங்க வேண்டும்.
  பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அவற்றை சரி செய்ய வேண்டும். பொது விநியோகத் திட்டத்தில் தேவையான அளவு அரிசி மற்றும் இதர பொருட்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
  தஞ்சாவூர் ஊராட்சி: ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் சங்கத்தின் ஒன்றியச் செயலர் கே. அபிமன்னன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலர் எம். மாலதி, விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் எஸ். ஞானமாணிக்கம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
  திருவையாறு: ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலர் பிரதீப் ராஜ்குமார் தலைமையில் ஒன்றியத் தலைவர் செல்வகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலர் ஏ. ராஜா, மாவட்டக் குழு உறுப்பினர் எம். ராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
  பூதலூர் ஒன்றிய அலுவலகம் முன் விவசாய தொழிலாளர் சங்க வடக்கு ஒன்றியச் செயலர் எம். சம்சுதீன் தலைமையில் தெற்கு ஒன்றியப் பொறுப்பாளர் கே. மருதமுத்து, தெற்கு ஒன்றிய தலைவர் எஸ். வியாகுலதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வடக்கு ஒன்றியச் செயலர் கே. காந்தி, நிர்வாகிகள் பி. கலைச்செல்வி, பாஸ்கரன், ராஜகோபால், முஹம்மது சுல்தான், மலர்கொடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
  கும்பகோணம்: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் வெ. ஜீவக்குமார் தலைமையில் 100-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். மேலும், திருப்பனந்தாள், திருவிடைமருதூர் உள்பட 14 ஒன்றியங்களில் இப்போராட்டம் நடைபெற்றது.
   பட்டுக்கோட்டை: ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு விதொச மாவட்டத் தலைவர் ஆர்.வாசு தலைமை வகித்தார். விதொச ஒன்றியச் செயலாளர் உலகநாதன், ஒன்றியத் தலைவர் குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி, விதொச நிர்வாகிகள் பெஞ்சமின், முனுசாமி, ஞானசேகரன், தமிழ்ச்செல்வன், தமயந்தி உள்ளிட்ட 153 பேர் கலந்து கொண்டு ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம்  கோரிக்கை மனுவை அளித்தனர்.
  சேதுபாவாசத்திரம்: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு விதொச ஒன்றியச் செயலாளர் ஆ. இளங்கோவன் தலைமை வகித்தார். ஒன்றியப் பொருளாளர் செந்தில், கிளைச் செயலாளர் முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினர் வீ.கருப்பையா, ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ். வேலுச்சாமி, விவசாய சங்க பொறுப்பாளர் தமிழன் உள்ளிட்டோர்  கலந்து கொண்டு,  ஒன்றிய ஆணையர் கிருஷ்ணமூர்த்தியிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai