சுடச்சுட

  

  மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பணியிடை நீக்கம்

  By DIN  |   Published on : 26th June 2019 09:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தஞ்சாவூர் மாவட்டம்,  ஒரத்தநாடு கல்வி மாவட்ட அலுவலரின் நேர்முக உதவியாளர் பணி ஓய்வு பெறும் நிலையில் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
  ஒரத்தநாடு கல்வி மாவட்ட அலுவலரின் நேர்முக உதவியாளராகப் பணியாற்றி வருபவர் எம். திருவள்ளுவன். இவர் ஜூன் 30ஆம் தேதி பணி ஓய்வு பெற இருந்தார். இந்நிலையில்,  இவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கான ஆணை ஒரத்தநாடு கல்வி மாவட்ட அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தது. இவர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் 2003 ஆம் ஆண்டில் நேர்முக உதவியாளராகப் பணியாற்றியபோது விதிகளை மீறி ரூ. 1.23 கோடி செலவு செய்ததாகவும், இதுதொடர்பாக இவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதன்பேரில்,  திருவள்ளுவனை பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அண்மையில் பணியிடை நீக்கம் செய்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai