அனைத்து சமூக மக்கள் பங்கேற்ற கோயில் விழா

கும்பகோணம் அருகேயுள்ள கிராமத்தில் அனைத்து சமூக மக்களும் பங்கேற்ற கோயில் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கும்பகோணம் அருகேயுள்ள கிராமத்தில் அனைத்து சமூக மக்களும் பங்கேற்ற கோயில் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் பகுதி சோழியவிளாகம் கிராமத்தில் மகா மாரியம்மன் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் 8 ஆண்டுகளுக்கு முன்பு புனரமைப்பு செய்யப்பட்டு, குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது. அப்போது நடந்த சுவாமி வீதியுலாவில் இரு சமூகத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் 8 ஆண்டுகளாகத் திருவிழா நடைபெறாமல் பூட்டிக் கிடந்தது. இந்நிலையில், சோழியவிளாகத்தைச் சேர்ந்த சிலர் அனைத்து சமூக மக்களின் குடியிருப்புப் பகுதிகளுக்கும் சுவாமி ஊர்வலம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை இவ்விழா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com