ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ரயில் மறியல் முயற்சி: 57 பேர் கைது

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தஞ்சாவூர் ரயிலடியில் தமிழ்த் தேசியக் கட்சி சார்பில்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தஞ்சாவூர் ரயிலடியில் தமிழ்த் தேசியக் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 57 பேரை போலீஸார் கைது செய்தனர்.
காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்டவற்றை எடுத்து நெல் விளையும் பூமியைத் தரிசாக மாற்ற வேண்டாம். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்து, காவிரி டெல்டாவை காப்பாற்ற வேண்டும் என முழக்கங்களை எழுப்பி தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ஆர்.பி. தமிழ்நேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பொதுச் செயலர்கள் முல்லைநாதன், ரகுபதி, மாநில இளைஞரணி செயலர் சந்திரபோஸ், மாவட்டச் செயலர் சபாபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர், ரயிலை மறிப்பதற்காக ரயில் நிலையத்துக்குள் நுழைய முயன்ற 57 பேரை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com