பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு திமுக சார்பில் உபகரணங்கள்

பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு மாவட்ட திமுக  வர்த்தகர் அணி சார்பில் உபகரணங்கள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு மாவட்ட திமுக  வர்த்தகர் அணி சார்பில் உபகரணங்கள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு திமுக தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் சு. கல்யாணசுந்தரம் தலைமை வகித்து, அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளுக்கான கட்டில்கள்,  சக்கர நாற்காலி, நோயாளிகளுக்கு பிஸ்கட்,பிரட் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் என மொத்தம் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பாபநாசம் ஒன்றிய திமுக செயலாளர் கோ. தாமரைசெல்வன், மாவட்ட துணை செயலாளர் கோவி.அய்யாராசு, மாவட்ட பொருளாளர் வி.எம். ஷேக்தாவூது, அரசு மருத்துவமனை மருத்துவர் கோ. குமரவேல், மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் செல்வமுத்துகுமரன்,  மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் புகழேந்தி,  மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எஸ். துரைமுருகன், நகர செயலாளர்கள் ச.கபிலன்,டி.பி.டி. துளசிஅய்யா உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.  
ஏற்பாடுகளை மாவட்ட வர்த்தகர்அணி அமைப்பாளர் செல்வமுத்துகுமரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com