சுடச்சுட

  

  அதிராம்பட்டினத்தில் இறுதிக்கட்டத்தை எட்டிய அகல ரயில் பாதை பணிகள்

  By DIN  |   Published on : 16th March 2019 09:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பட்டுக்கோட்டை~ திருவாரூர் வரையிலான 76 கிலோ மீட்டர் தொலைவுக்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இவ்வழித்தடத்தில் மார்ச் 31-க்குள் நடைபெறவுள்ள அதிவேக சோதனை ஓட்டத்துக்கு பிறகு, பயணிகள் ரயில் சேவையைத் தொடங்க தெற்கு ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
  மேலும், 'பி' கிரேடு தரச்சான்று பெற்றுள்ள அதிராம்பட்டினம் ரயில் நிலையம் கட்டுமானப் பணிக்கு பின் பிரமாண்டமாக காட்சியளிக்கிறது. எஞ்சியுள்ள  ஒரு சில பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இரவில்,  மின்னொளியில் ஜொலிக்கிறது அதிராம்பட்டினம் ரயில் நிலையம்.  இதை, அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தினமும் காலை, மாலை நேரங்களில் மகிழ்ச்சியுடன் பார்வையிட்டுச் செல்வதுடன்,  இவ்வழித்தடத்தில் சென்னைக்கு விரைவு ரயில் போக்குவரத்து சேவை தொடங்கும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai