சுடச்சுட

  

  தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் வட்டாட்சியர் அலுவலகம்,  பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில்  நடைபெற்று வரும்  தேர்தல் பணிகளை நாகை ஆட்சியரும்,  நாகை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான  சுரேஷ்குமார் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
  மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் பாபநாசம் பேரவைத் தொகுதி இடம் பெறுவதையொட்டி நாகை ஆட்சியர் இந்த ஆய்வை மேற்கொண்டார். ஆய்வின்போது, தேர்தல் அலுவலக பணிகளையும், வாக்குப் பதிவு இயந்திரங்களையும் ஆட்சியர் பார்வையிட்டார்.
  கும்பகோணம் கோட்டாட்சியர் வீராசாமி,  பாபநாசம் வட்டாட்சியர் கண்ணன்,  மண்டல துணை வட்டாட்சியர்கள் தர்மராஜ், செல்வராஜ், செந்தில்குமார், செல்வம், வருவாய் அதிகாரி ராஜ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai