சுடச்சுட

  

  அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் ஆர்ப்பாட்டம்

  By DIN  |   Published on : 17th March 2019 03:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  சீரமைப்புக் குழு பரிந்துரையின்படி ஓய்வூதியத் திட்டத்தை அரசை ஏற்று நடத்த வேண்டும் என வலியுறுத்தி, அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் மற்றும் வாரிசுகள் (ஏஐடியுசி) சங்கத்தினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  மாத முதல் தேதியில் ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியத்துக்கு கணக்கீடும் 119 சதவிகித அகவிலைப்படியை 125 சதவிகிதமாக உயர்த்த வேண்டும். நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு  மருத்துவ மற்றும் சமூக காப்பீடுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
  2003, ஏப்.1 ஆம் தேதிக்குப் பின்னர் பணியில் சேர்ந்தவர்களையும் ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்க வேண்டும்.  
  2018, ஏப்ரலில் ஓய்வு பெற்றவர்களின் பணப்பலன்களை காலதாமதம் இல்லாமல் வழங்க வேண்டும். 2016, செப்டம்பரில் வாரிசுப் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி  தஞ்சாவூர் கரந்தை புறநகர் கோட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் பொதுச் செயலர் அப்பாத்துரை தலைமை வகித்தார். சங்கத் தலைவர் தியாகராஜன்,  கௌரவத்தலைவர் சந்திரமோகன்  முன்னிலை வகித்தனர். ஏஐடியுசி மாநிலச் செயலர் சந்திரகுமார் ஆர்ப்பாட்டத்தைத் தொடக்கி வைத்தார்.
  ஆர்ப்பாட்டத்தில், ஏஐடியுசி மாவட்டச் செயலர் தில்லைவனம், தலைவர் சேவையா, ஓய்வுபெற்றோர் சம்மேளன மாநிலத் துணைத்தலைவர் மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  பொருளாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai